புதன், 23 செப்டம்பர், 2009

உன்னை போல் ஒருவன் - நம் முன் இருக்கும் கண்ணாடி

இது கமலின் புதுப்பட விமர்சனமில்லை.

ஒரு நல்ல திரைப்படம், அதற்க்கு இத்தனை விமர்சனங்களா? எதார்த்தமான ஒரு கதை. அதில், குத்து பாட்டு , தேவை இல்லா காட்சிகள் இல்லை. இஸ்லாமிய சகோதரர்களை தீவிரவாதிகளாக காட்டியிருப்பது தவறு இலலை, அது காட்சிக்காக மட்டுமே பயன் படுத்த பட்டுள்ளது. அதற்காக எல்லா இஸ்லாமியரும் தீவிரவாதிகளும் அல்ல. படம் முடிந்து வெளியே வரும் போது தீவிரவாதிகள் மேல் வெறுப்பு ஏற்பட்டது, கட்டாயம் அது இஸ்லாமிய சகோதரர்கள் மேல் அல்ல. தீவிரவாதம் ஒரு தனி மதம். ஒரு சிலரின் தவறு, ஒரு சமூகம் மேல் சாயம் பூசப்படுகிறது. இது தவறு.

பார்ப்பனர் என்று ஒரு இனத்தவரை அழைகிறார்கள். சாதிகள் இல்லையடி பாப்பா என்று எத்தனை பாரதிகள் வந்து சொன்னல்லும் நாம் மாறப்போவது இல்லை. இந்த படத்துக்கும் அந்த குறிப்பிட்ட ஜாதி மக்களுக்கும் என்ன தொடர்பு?

நல்ல சினிமா, நல்ல சினிமாவாக மட்டும் இருக்கட்டும். நீண்ட நாட்களுக்கு பின்னர் நல்ல திரைப்படம் வந்துள்ளது. நல்ல சினிமாவை வரவேற்போம். நிச்சயமாக கமல் இஸ்லாமியரையோ, வேறு எவரையோ புண்படுத்தும் நோக்கில் இந்த படம் எடுத்திருக்க மாட்டார்.

ஜெய் ஹிந்த். ஓன்று பட்டால் உண்டு வாழ்வு.